ஒமைக்ரான் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா வைரஸை காட்டிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தாலும், ஒமைக்ரானின் அதிவேக பரவல் தன்மை தொற்று பாதிப்புகளை சுனாமி வேகத்தில் அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாவும் எனவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
Comments