சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிச் சென்ற 547 வாகனங்கள் பறிமுதல்

0 3044

இரவுநேர ஊரடங்கின் போது சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிச் சுற்றித்திரிந்ததாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த  547 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், முகக்கவசம் அணியாததற்காக 462 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 

 சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரத்தில் முகக்கவசம் அணியாத 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 66 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் ஆவடியில் முகக்கவசம் அணியாததற்காக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments