முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 2575

முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று வழங்குகிறது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளித்து, மத்திய அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது.

இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதை எதிர்த்து, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து கடந்த இரண்டு நாட்களாக விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments