பாக். நடத்தும் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாகிஸ்தானுடன் தொடரும் முரண்பாடு நீடிப்பதாகவும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இந்தியா பதிலடி தந்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் அரசு விடுத்த அறிக்கையில் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. நேரடியாக இல்லையென்றாலும் இந்தியா காணொலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது. சார்க் மாநாடு குறித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்புகளை பார்த்தோம். ஆனால் 2014க்குப் பிறகு சார்க் மாநாடு நடைபெறாத காரணங்களை பார்த்தால் நிலைமையில் எந்த வித முன்னேற்றமும் காணப்படவில்லை என்று இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
Comments