ஒமைக்ரான் மிதமானது என்பதால் அலட்சியம் வேண்டாம் - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என்பதால் அலட்சியம் வேண்டாம் என்று இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பன்மடங்கு வேகமாகப் பரவக் கூடிய உருமாறிய கொரோனாவின் பெயர்தான் ஒமைக்ரான். இதன் பாதிப்புகள் அதிகமில்லை என்று கூறப்படுவதால் பொதுமக்களுக்கு அச்சம் நீங்கி அலட்சியம் தோன்றியுள்ளது.
இது தவறானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஒருபோதும் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் என்றும் முகக்கவசம், சானிட்டைசர் பயன்படுத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்றும் இங்கிலாந்து அறிவியல் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திர குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்கரான் பாதிப்புக்கு உள்ளான பலருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது குறித்து விளக்கிய மருத்துவ நிபுணர், கொரோனா தனது பாதிப்பை மிதமாக்கவே இல்லை என்று எச்சரித்துள்ளார்.அடுத்து மற்றொரு உருமாறிய நிலையில் கொரோனா பரவும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments