தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

0 4255
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்தததை அடுத்து சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் முன்னதாகவே அடைக்கப்பட்டன.

சென்னையில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்ணா சாலையில் 100 மீட்டர் இடைவெளியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இரவு பணிக்கு செல்பவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே அனுமதித்தனர்.

தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாரில் முன்கூட்டியே கடைகள் அடைக்கப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி போலீசார் வீட்டிற்கு அனுப்பினர்.

திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் இரவு 10 மணிக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன.

தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் பத்துமணிக்கு முன்னரே வீடுகளுக்கு சென்றனர். அவசிய காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது தொற்று பரவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

இரவு ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணிகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படவும் அனுமதிக்கப்படுகின்றன.

இரவு நேர ஊரடங்கு காரணமாக, எப்போதும் வாகன நெரிசலுடன் பரபரப்பாகக் காணப்படும் சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடின.

சாலைகளில் 100 மீட்டர் இடைவெளியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சென்றவர்கள், உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இரவு பணிக்கு செல்பவர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments