விவசாயி பெயரில் போலியாக நகை கடன் பெற்று மோசடி ; போலீஸ் தீவிர விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி ஒருவர் பெயரில் போலியாக 43 கிராம் நகை கடன் பெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
கண்டாச்சிபுரத்தில் உள்ள விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியில் கலியபெருமாள் என்பவர் 9 கிராம் தங்க நகை வைத்து கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 5 சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்து கலியபெருமாள் வங்கியில் விசாரித்த போது, அவர் பெயரில் கண்டச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 43 கிராம் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள், போலீசில் புகாரளித்தார். இதற்கு முன் அதே கூட்டுறவு சங்கத்தில் கலியப்பெருமாள் நகை கடன் வாங்கிய போது சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கையெழுத்தை அங்கு பணியாற்றும் அதிகாரிகள் பயன்படுத்தி அவர் பெயரில் போலியாக நகை கடன் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments