முழு ஊரடங்கு அமலாகும் நாளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் ; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

0 7070
முழு ஊரடங்கு அமலாகும் நாளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

முழு ஊரடங்கு அமலாகும் நாளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த டிஎன்பிஎஸ்சி, ஜனவரி 8ஆம் தேதியன்று கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வும் 9ஆம் தேதி ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments