நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு

0 9913
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 'வலிமை' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு 'வலிமை' வெளியாக இருந்த நிலையில் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்கிற்கு வருவோரின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சூழல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் இயக்குநர் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments