இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவு
கொரோனா பரவலைத் தடுக்கப் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 621 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 602 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 179 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 746 ஆக இருந்தது.
துறைமுக நிறுவனங்கள், கட்டுமானப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை சரிந்தது.
Comments