கால்களில் டேக் கட்டப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த புறா ; சீனாவின் உளவு புறா என நினைத்து பொதுமக்கள் பீதி
ஆந்திராவில் கால்களில் டேக் கட்டப்பட்ட புறா ஒன்று சுற்றித்திரிந்ததை கண்ட மக்கள் அது சீனாவிலிருந்து வந்த உளவு புறா என நினைத்து பீதி அடைந்த நிலையில், அது சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு புறா பந்தய கிளப்புக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே சமீபத்தில் காலில் சீன முத்திரையுடன் டேக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்று தென்பட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த புறாவை கைப்பற்றிய போலீசார் புறாவின் உடம்பில் எல்க்டிரானிக் கருவி அல்லது சிப் போன்ற எதுவும் இல்லை என உறுதி செய்தனர். இந்நிலையில், ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டத்தின் Chimakurthy பகுதியில் புறாக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ள Mannam Nagaraju என்பவர், காலில் டேக் கட்டப்பட்ட நிலையில் வந்த ஒரு புறா குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணையில் AIR-2019-2207 என்ற டேக்குடன் இருந்த அந்த புறா, சென்னை குரோம்பேட்டையில் உள்ள, எஸ்.ஆர்.கோகுல கிருஷ்ணன் என்பவரின் All In Racing Pigeon Society-க்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
Comments