அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? ; அமைச்சர் துரைமுருகன் கேள்வி

0 3335
அதிமுக ஆட்சியில் கலைஞர் பெயரிலான திட்டங்கள் முடக்கப்பட்டன

அம்மா உணவகம் மூடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பெயரிலான பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அம்மா உணவக பணியாளர்கள் குறைக்கப்படுவதாகவும், அங்கு உணவு தயாரிப்புக்கு வழங்கப்படும் பொருட்களும் குறைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார். குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? என வினவினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பெயர் கொண்ட திட்டத்தை முடக்கியதால் தான் அதிமுக ஆட்சியை இழந்து அனுபவிப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments