2022-ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்தில் நடைபெற உள்ள நடப்பாண்டு மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மிதாலி ராஜ் தலைமையிலான அந்த அணியில் ஹர்மன் பிரித் கவுர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யாஸ்டிகா உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஜுலன் கோஸ்வாமி, பூஜா , மேக்னா சிங், ராஜேஷ்வரி, பூனம் யாதவ் உள்ளிட்டோரின் பெயர்களும் அணியில் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்தில் வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்திய அணி, மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ள தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments