நடப்பாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை பத்து இலட்சத்தை எட்டும் ; மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்
நடப்பாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை பத்து இலட்சத்தை எட்டும் என மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கணித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் மின்சார வாகனங்கள் விற்றதாகவும், கடந்த ஆண்டில் 2 இலட்சத்து 33 ஆயிரம் வாகனங்கள் விற்றதாகவும் தெரிவித்துள்ளது.
இவற்றில் இருசக்கர வாகனங்கள் மிக அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மொத்தம் 10 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்றுள்ளதாகவும், இந்தச் சாதனை இந்த ஒரே ஆண்டிலேயே முறியடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments