பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறைக்கு மாற்றம்

0 2930
மதுரை சிறையில் இருந்து ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறைக்கு மாற்றம்

பண மோசடி வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாதுகாப்பு காரணங்கள் கருதி திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கர்நாடாகவில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு பின்னர் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, அவரை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு காரணங்கள் காரணமாக ராஜேந்திர பாலாஜியை திருச்சி சிறைக்கு மாற்றுவதாக அதிகாரிகள் கூறினர். இதனிடையே, ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுக்க விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments