அம்மா மினி கிளினிக் மூடல்: பேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்..!
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் தற்காலிக திட்டம் தான் எனவும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கியதால், அவற்றை மூடிவிட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கமளித்தார்.
சில மினி கிளினிக்குகளில் முறையாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படாததோடு, கழிவறைகளிலும், மயானங்களிலும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அம்மா மினி கிளினிக் திட்டத்தை சிறுமைபடுத்துவது போல் பேசுவதாகவும், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆதாரத்தோடு பேசியதாகவும், தேவைபட்டால் இன்று மாலையே கழிவறைகளில் அம்மா மினி கிளினிக் செயல்பட்ட இடங்களை அதிமுகவினருக்கு காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments