ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளில் பங்கேற்கச் செல்ல அனுமதி

0 6204

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில், UPSC மற்றும் TNPSC தேர்வுகள், மற்ற போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்பு நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேர்வுகளில் பங்கேற்கச் செல்பவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments