கஜகஸ்தானில் நாடு தழுவிய அவசர நிலைப் பிரகடனம் அமல்
கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் தொடர் போராட்டங்களால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்வதாக அறிவித்த போதும் பொது மக்கள் தொடர் கலவர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் அரசு உதவி கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்மாட்டி, தலைநகர் நூர் சுல்தான், Mangistau உள்ளிட்ட நகரங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments