கோவாக்சின் தடுப்பூசி போட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பாராசிட்டமல் தேவையில்லை - பாரத் பயோடெக்
சிறுவர் சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாராசிட்டமல் அல்லது வேறு எந்தவித வலிநிவாரணி மாத்திரைகளையோ தர வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட 15 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டோரிடம் சில தடுப்பூசி மையங்கள் 500 மில்லிகிராம் பாராசிட்டமல்களை மூன்று வேளை எடுத்துக் கொள்ளும் படி பரிந்துரைக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு எந்தவித மாத்திரைகளும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments