ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது-ராதாகிருஷ்ணன்
பெருநகரங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது வரை ஒரு லட்சத்து 16 ஆயிரம் படுக்கைகளும், 1730 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
பெரியவர்களை விட சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், 3 நாட்களில் 12 இலட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments