சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடல் நண்டு என்று கூறி மலேசியாவுக்கு கடத்த முயன்ற ஆயிரத்து 364 நட்சத்திர ஆமைகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்ககப்பிரிவில் இருந்து சரக்கு விமானம் ஒன்று செல்ல இருந்த நிலையில், அதில் இருந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள 13 பெட்டிகளில் ஏற்றுமதி செய்வதற்காக உணவுக்கான கடல் நண்டுகள் இருப்பதாக பார்சல்களில் எழுதப்பட்டு இருந்தன.
அவற்றை சோதனை செய்தபோது, 7 பெட்டிகளில் உயிருள்ள நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாதுகாக்கப்பட்ட அரிய விலங்குகள் பட்டியலில் உள்ள நட்சத்திர ஆமைகள் தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கடத்தல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Comments