கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகளுக்கு டெங்கு சிகிச்சை.!

0 2786

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும்  42 பேரில் 32 பேர் குழந்தைகள் என மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

ஏடிஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதாக தெரிவித்த அவர், குழந்தைகளை கொசு கடிக்காதவாறு பெற்றோர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தூங்கும் குழந்தைகளை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க கட்டாயமாக கொசு வலை பயன்படுத்த வேண்டும் எனவும், டையர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட கொசுக்கள் முட்டையிடும் அதிக வாய்ப்புள்ள இடங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments