ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு..!
தமிழகத்தில் கொரேனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 9 ஆம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முழு ஊரடங்கின்போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆம் தேதியன்று உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Comments