தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 7110

ஜனவரி 6, 7 ஆகிய நாட்களில் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 8 அன்று தென் கடலோர மாவட்டங்களில்  மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 9 அன்று தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments