முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அத்தோடு, சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணித்து, அவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் Hassan மாவட்டத்தில் பி.எம். சாலை என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Comments