இந்தியா, இலங்கை கூட்டாக முன்னெடுக்கும் எண்ணெய் கிடங்கு அபிவிருத்தி திட்டம் - இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

0 2709

இலங்கையின் திரிகோணமலை கடற்பகுதியில் உள்ள சீன விரிகுடா என அழைக்கப்படும் பகுதியில் இந்தியாவும் இலங்கையும் கூட்டாக முன்னெடுக்கும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அபிவிருத்தி திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அரசுக்கு சீனா கொடுத்து வரும் தொடர் அழுத்தத்துக்கு மத்தியில் இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான, தலா 12 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 99 சேமிப்பு கிடங்குகளை புதுப்பிக்க ,1987-ல் கையெழுத்தான இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கிடங்குகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக இந்த ஒப்பந்தம் ஒருபோதும் நிறைவேறவில்லை. இந்நிலையில், 2015-ல் இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, திரிகோணமலை பகுதியை ஒரு வளர்ச்சி மையமாக மாற்ற வலியுறுத்தினார். இதற்கிடையே, Ashok Leyland நிறுவனத்திடம் இருந்து 500 புதிய பேருந்துகள் வாங்குவது, மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து இலங்கை போலீசாருக்கு 750 வாகனங்கள் வாங்குவது ஆகிய ஒப்பந்தங்களுக்கும் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments