தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

0 3137

2022 ஜனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 36 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் சேர்க்கவும், திருத்தவும், முகவரி மாற்றவும் நவம்பரில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்தபின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 12 இலட்சத்து 26 ஆயிரத்து 759 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 23 இலட்சத்து 91 ஆயிரத்து 250 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 7804 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக அளவாக 7 இலட்சத்து 11 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் குறைந்த அளவாக ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 517 வாக்காளர்கள் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments