தனியார் ஆய்வகங்களின் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - தமிழக அரசு

0 2963

தனியார் ஆய்வகங்கள் கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய், என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தனியார் ஆய்வகங்கள் அரசு குறிப்பிட்டுள்ள இந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments