கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை செலுத்தி வடகொரியா மீண்டும் சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை கிழக்கு கடலோரப் பகுதியில், வட கொரியா மீண்டும் ஏவி சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரிய அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கிம் ஜோங் உன், தமது கட்சி நிர்வாகக் கூட்டத்தில் அணுஆயுதங்களை விட மக்களுக்கு உணவே முக்கியம் என குறிப்பிடிருந்தார்.
இந்நிலையில், 2022 புத்தாண்டில் முதல் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. இதற்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வட கொரியாவின் நடவடிக்கை தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (FUMIO KISHIDA) கருத்து தெரிவித்துள்ளார்
Comments