விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 4 பேர் பலி.! தலா 3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

0 2815

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 4 பேர் பலியாகினர்.

மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான உரிமம் பெற்ற பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.

இதில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமான நிலையில், அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த 7 பேரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments