கொரோனாவின் இறுதி அலையை எதிர்கொள்ள மக்களுக்கு லாக்டவுன் திணிப்பதை விட விழிப்புணர்வை அதிகரிப்பதே போதுமானது - போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வரும் சூழலில் மற்றொரு முறை லாக் டவுன் ஏற்படுவதைத் தவிர்த்திருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இறுதி அலையை எதிர்கொள்ள மக்களுக்கு லாக்டவுன் திணிப்பதை விட விழிப்புணர்வை அதிகரிப்பதே போதுமானது என்று அவர் தெரிவித்தார். தடுப்பூசி மற்றும் பூஸ்டர் செலுத்தும் பணியை வேகப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று புதிதாக 2 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பொது இடங்களில் வியாபாரத்தைத் தடை செய்யவில்லை என்றும் மக்கள்அனைவரும் முகக்கவசம் அணிந்து நடமாட வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.
Comments