தர்மபுரியில் தடையில்லா சான்று வழங்க ரூ.3500 லஞ்சம்.! வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கசெயலாளர் கைது

0 2567

தர்மபுரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அடமானமாக வைத்த நிலப்பத்திரத்தை திரும்பப் பெற, தடையில்லா சான்று பெற விவசாயி ஒருவர் வங்கியின் செயலாளர் முருகனை அணுகியுள்ளார்.

சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டதாகவும், நாகராஜன் 3500 லஞ்சமாக கொடுக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினரின் வழிகாட்டுதல்படி, வங்கி செயலாளர் முருகனிடம், ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் முருகனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments