"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
7 மற்றும் 8 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென்று கூறப்பட்டுள்ளது.
Comments