ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு

0 5297

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments