பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன ; சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 3307
பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன

சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தொலைதூர கல்வி மூலம் பொறியியல் பட்டம் பெற்றவர்களை டான்ஜெட்கோவில் உதவி பொறியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இளநிலை பொறியாளர்களாக உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

தனி நீதிபதி உத்தரவுப்படி தொலைதூர கல்வியில் முடித்தவர்களுக்கு வேலை வழங்கினால், பணி மூப்பு பாதிக்கப்படும் என மனுவில் குற்றஞ்சாட்டினர். வழக்கு விசாரணையின்போது, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கல்விக்கும் தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை அந்த பல்கலைக்கழகங்கள் உணர வேண்டுமெனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments