உடல் நலக்குறைவால் மயங்கிய நிலையில் இருந்த குரங்குக்கு உதவிய நபரின் வீடியோ வைரல்

0 4493
மயங்கிய நிலையில் இருந்த குரங்குக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நெடுஞ்சாலைக்கு வந்து உடல் நலக்குறைவால் மயங்கிய நிலையில் இருந்த குரங்கு ஒன்றுக்கு, ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் இருந்து குரங்குகள் உணவுக்காக வி.கூட்ரோடு-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வருவதாக கூறப்படுகிறது. அப்படி வரும் பல குரங்குகள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது வழக்கம்.

இந்நிலையில், அவ்வழியாக வந்த வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் மயங்கிய குரங்கை தூக்கி சென்று கைபம்பில் இருந்து தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த குரங்கு கண்விழித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments