தலைக்கவசம் அணியாததற்காக அபராதம் விதித்ததால், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளரின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்ற நபர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைக்கவசம் அணியாததற்காக அபராதம் விதித்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளரை கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றதாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தர்மராஜன் வடக்கு ரத வீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் தலைக்கவசம் அணியாமல் வந்த நிலையில், தர்மராஜன் 200 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
அபராதத்தை கெட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ், தான் வைத்திருந்த சிறிய ரக கத்தியால் தர்மராஜின் கழுத்தை அறுக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்.
Comments