10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

0 8465

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க, இல்லம் தேடி கல்வி திட்டத்தை திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைத்தனர். வீடு வீடாக சென்று இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY