லக்கிம்புர் கேரி வன்முறையில் 8 பேர் உயிரிழந்த விவகாரம்; 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

0 2260

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேரில் முதல் நபராக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, ஆசிஸ் மிஸ்ரா உள்ளிட்ட பாஜகவினர் சென்ற கார்கள் மோதியதை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments