உடலை உடற்கூராய்வு செய்யவேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

0 2715

தனது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டாம் எனக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற அந்த இளைஞர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணி நிமித்தமாக பெற்றோர் கேரளாவில் வசித்து வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அர்ஜுனை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற உறவினர் ஒருவர் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால், ஜன்னலை திறந்து பார்த்த போது அர்ஜுன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

தனது சாவுக்கு யாரும் காரணமல்ல? தனது உடலை உடற்கூராய்வு செய்யாமல் அப்படியே பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதமும் போலீசாரின் கையில் சிக்கியுள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் தான் அர்ஜூன் தனது காதலியை சந்தித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், காதல் தோல்வி காரணமாக தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments