புத்தாண்டை கொண்டாட மடெய்ரா தீவை நோக்கி சென்ற சொகுசு கப்பலில் மேலும் 12 பேருக்கு கொரோனா ; உல்லாசப்பயணம் ரத்து
புத்தாண்டை கொண்டாட மடெய்ரா தீவை நோக்கி சென்ற சொகுசு கப்பலில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், உல்லாசப்பயணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.
ஜெர்மன் நாட்டு சொகுசு கப்பலான எய்ட்-அனோவா , 2,844 பயணிகள் மற்றும் 1,353 ஊழியர்களுடன் மடெய்ரா தீவை நோக்கி சென்றது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கப்பலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென 52 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் அந்தக் கப்பல் போர்சுகல் நாட்டின் லிஸ்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. உல்லாச பயணம் மீண்டும் தொடங்கப்பட இருந்த நிலையில் மேலும் 4 பயணிகளுக்கும், 8 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதால் பயணம் ரத்து செய்யப்பட்டது. கப்பலில் இருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் இறங்கி சென்றனர்.
Comments