பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சீனாவில் போட்டிகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவல், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ராஜாங்க ரீதியிலான புறக்கணிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நடுவே, திட்டமிட்டபடி பிப்ரவரி 4-ம் தேதி போட்டி தொடங்கும் என சீனா அறிவித்துள்ளது.
"பசுமை விளையாட்டு" என்ற இலக்குடன் நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் 26 இடங்களிலும் சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Comments