ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் டாடா நிறுவனத்தின் கருவிக்கு ஆர்.டி.பி.சி.ஆர் ஒப்புதல்

0 3575

ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளது.

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரானை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர், டேக்பாத் கருவி மூலம் தொற்று உருமாறியுள்ளதா? எனவும், மரபணு பகுப்பாய்வு மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து, அதன் பிறகு மரபனு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி முழு விவரம் பெற 7 நாட்கள் வரை ஆகின்றன.

இதனால் விரைந்து பரிசோதனை முடிவுகளை பெற டாடா மருந்து நிறுவனம் TATA MD CHECK RT-PCR OmiSure என்ற பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது. இந்த புதிய கருவி, ஒரே சோதனையில் ஓமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி பரிசோதனை முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்த பிறகே கொள்முதல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments