காளை விடும் விழாவில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் ; அனுமதியின்றிக் காளை விடும் விழா நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே காளை விடும் விழாவில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆரணியை அடுத்த கொளத்தூரில் மார்கழி அமாவாசையை ஒட்டி நடைபெற்ற விழாவில் பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றுச் சீறிப் பாய்ந்தன.
காளைகள் முட்டியதில் காயமடைந்த பத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளைக் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
அதையும் மீறிக் குறுக்கு வழிகளில் காளைகளைக் கொண்டுவந்து அனுமதியின்றிக் காளை விடும் விழா நடத்தியதாக நிர்வாகிகள் 5 பேர் மீது கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
Comments