நாடு முழுவதும் நாளை முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
நாடு முழுவதும் நாளை முதல் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாட்டில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார்.
இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணயதளத்தில் புத்தாண்டன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அவர்கள் அனுப்பிவைக்கப் படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய 28 நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. சிறார்களுக்கென தனியாக தடுப்பூசி மையங்கள் அமைப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments