ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்து ; ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

0 2812
ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்து ; ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குஜராத்தின் சோட்டா உதய்ப்பூரில் இருந்து அலிராஜ்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயங்கியதையடுத்து அது நிலை தடுமாறி அருகே இருந்த மெல்கோத்ரா ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ள மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments