கொரோனா அச்சுறுத்தல் : மேற்கு வங்கத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்
மேற்குவங்கத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அனைத்துப் பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திங்கள் முதல் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்கத் தலைமைச் செயலர் துவிவேதி., முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், மனமகிழ் பூங்காக்கள் ஆகியன திங்கள் முதல் மூடப்படும் எனத் தெரிவித்தார்.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், நிர்வாகம் தொடர்பான அனைத்துக் கூட்டங்களும் இணையவழியில் காணொலியில் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments