தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து

0 2536
தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து


தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்றத்தின் வளாகத்தின் மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த உடற்பயிற்சி கூடத்துக்கும், சட்டப்பேரவை கட்டிடத்துக்கும் பரவியது.

இதனால் வானில் பல அடி உயரத்துக்குப் கரும்புகை எழும்பியது. தீ பரவுவதை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் 36 பேர் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் யாரேனும் இருந்தனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments