வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை 5 தெருநாய்கள் கடித்து குதறியதால் சிறுமி படுகாயம்
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், 4 வயது சிறுமியை 5 தெருநாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. Bagsewaniya பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை அங்கு நின்று கொண்டிருந்த 5 தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறின.
தக்க சமயத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த நாய்களை கல்லால் அடித்து விரட்டினார். நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments