எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்... புத்தாண்டில், பைக்கில் வீலிங் சாகசம் செய்த இளைஞரை, தட்டி தூக்கிய போலீசார்

0 3789

சென்னையில், புத்தாண்டு இரவில் தடையை மீறி கடற்கரைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பயணம் மேற்கொண்ட நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கரவாகனத்தில் அதிவேகமாகவும், சாகசத்திலும் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், தரமணியை சேர்ந்த விஜயன் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார் இருசக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments